நாட்டின் முதல் லோக்பால் தலைவராக பி.சி.கோஷ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்

0 731

நாட்டின் முதல் லோக்பால் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சி.கோஷ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட "பொது சேவகர்கள்" மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் அதிகாரம் படைத்தது லோக்பால் அமைப்பு.

இதற்கான சட்டம் 2013ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுவிட்ட போதிலும், இதுவரை லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. லோக்பால் அமைப்பை விரைந்து ஏற்படுத்தக்கோரி வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதற்கு காலக்கெடு விதித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு ஓரிரு நாட்களுக்கு முன்னர், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷின் பெயரை இறுதி செய்து பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்பால் உறுப்பினர்களாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 4 பேரும், குடிமையியல் துறைகளில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரிகள் 4 பேரும் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பினாகி சந்திர கோஷ், ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments