காட்டு யானை தாக்கியதில் கும்கி யானைக்கு பலத்த காயம்

0 232

கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் கும்கி யானை ஒன்றுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள யானைகள் முகாமில் சேரன் மற்றும் ஜான் எனும் இரண்டு கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, கும்கி யானைகள் முகாமிற்குள் திடீரென புகுந்து, அங்கிருந்த கும்கி யானையான சேரனை கடுமையாக தாக்கியது. இதில் நிலைகுலைந்த சேரன் யானை, அங்கேயே காயத்துடன் விழுந்தது.

இதனை அடுத்து அங்கு இருந்த யானை பாகன்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் உடனடியாக பட்டாசு வெடித்து அந்த ஒற்றை காட்டு யானையை விரட்டினர். முதுகிலும் இடது பக்க பின்னங்காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ள சேரன் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments