தரக்கட்டுப்பாட்டு மையத்தின் விதிகளை பின்பற்ற கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

0 539

அனைத்து உறுப்புக் கல்லூரிகளும் கற்றல், கற்பித்தல், மதிப்பிடுதலில் விதிகளை பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரியில் விடுதி வசதி சரியில்லை என  கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம், உத்தரவை அனைத்து கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும் என கூறியிருந்தது.

அதைத்தொடர்ந்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ள பல்கலைக்கழக மானிய குழு, அனைத்து பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளும் கற்றல், கற்பித்தல், மதிப்பிடுதலில் ஒருங்கிணைந்த தரக்கட்டுப்பாட்டு மையத்தின் ( IQAC ) விதிகளை பின்பற்றி முறையாக தங்கள் கல்லூரிகள் / விடுதிகளை பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments