பிரெக்சிட் வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து பிரதமர்

0 955

பிரெக்சிட் வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவு குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றம் நடத்திய வாக்கெடுப்பில் இரண்டாவது முறையாக தெரசா மேயின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில்  மார்ச் 29ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து ஒப்பந்தமின்றி வெளியேறும் முடிவுக்கு எதிராக எம்.பிக்கள் வாக்களித்துள்ளனர்.

நான்கு வாக்குகளில் தெரசா மே அரசு கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அதற்கு முன்பாக நாடாளுமன்றத்தில் குழப்பமான காட்சிகள் காணப்பட்டன.

இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டப்பிரிவு 50ன் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்தலாமா என்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், மூன்றாவது முறையாக பிரக்சிட் தொடர்பான வாக்கெடுப்பை நடத்த இருப்பதாகவும் தெரசா மே அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments