பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களுக்கு அடி உதை

0 10080

பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனை, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் ஆவேசத்துடன் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. 

பேஸ்புக் மூலம் பழகி பெண்களை அழைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோர் மட்டும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களிடம் சிக்கியுள்ளனர். ஆவேசத்தில் இருந்த உறவினர்கள், திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கின்றனர். அப்போது தாங்கள் செய்த குற்றத்தை இருவரும் ஒப்புக் கொள்வது பதிவாகியுள்ளது.

பின்னர் சபரிராஜன் மற்றும் திருநாவுக்கரசுக்கு சரமாரியாக அடி விழுந்தது. தடி மற்றும் கற்களைக் கொண்டு இருவரும் தாக்கப்பட்டதால், கதறி அழுதனர்.

இந்த தாக்குதலில் திருநாவுக்கரசுக்கு பலத்த அடி விழுந்துள்ளது. இதை அடுத்து அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சில நாட்கள் கழித்து கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments