பிரெக்சிட் விவகாரம் -இரண்டாவது முறையாக தெரசா மேயின் தீர்மானம் தோல்வி

0 387

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் இங்கிலாந்து அரசின் முடிவுக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பிரெக்சிட்என்றழைக்கப்படும் இந்த திட்டத்திற்கான நடவடிக்கையை பிரிட்டன் நாடாளுமன்றம் இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக தோல்வியடைந்தது.

தெரசா மே-யின் தீர்மானத்திற்கு ஆதரவாக 202 பேரும் எதிராக 432 பேரும் ஓட்டளித்தனர். இதனால் 149 வாக்குகள் வித்தியாசத்தில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

பிரெக்சிட் நடவடிக்கையின் காலக்கெடு இம்மாதம் 29ம் தேதி முடிவடைய உள்ளது. பிரெக்சிட் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ள இங்கிலாந்து எம்பிக்கள் ஐரோப்பிய யூனியனுடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மே அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments