லோக்பால் நியமனத்திற்கான தேர்வுக் குழு கூட்டம் எப்போது நடைபெறுகிறது? 10 நாட்களில் தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு

0 349

லோக்பால் நியமனத்திற்கான தேர்வுக் குழுவின் கூட்டம் அடுத்து எப்போது நடைபெற உள்ளது என்பது பற்றி 10 நாட்களில் தெரிவிக்குமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ((Ranjana Prakash Desai)) தலைமையிலான தேடல் குழு, லோக்பால் அமைப்பின் பதவிகளுக்கு தலைவர், நீதித்துறை சார்ந்த உறுப்பினர்கள், நீதித்துறை சாராத உறுப்பினர்கள் என 3 குழுக்களாக பெயர்களை தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைத்திருப்பதாக, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், தலைமை நீதிபதி அமர்வில் தெரிவித்தார்.

இதேபோல, பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழுவை கூடிய விரைவில் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு, மத்திய அரசிடம் உரிய துறைச் செயலாளரிடம் கூறியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து தேர்வுக் குழுவின் கூட்டம் எப்போது நடைபெற உள்ளது என்பது பற்றி 10 நாட்களில் தெரிவிக்குமாறு நீதிபதிகள் குறிப்பிட்டனர். தேடல் குழு பரிந்துரைத்துள்ள பெயர்களை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments