ஐ.என்.எஸ் கடற்படை தளத்தின் மீது ஆளில்லா விமானம் பறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை

0 881

சென்னை அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்தின் மீது ஆளில்லா விமானம் பறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..

சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் நேற்று இரவு ஆளில்லா விமானம் ஒன்று பறந்துள்ளது. நீண்ட நேரமாக ஆளில்லா விமானம் நோட்டம் விட்டு கொண்டிருந்ததை, பாதுகாப்பில் இருந்த கடற்படையினர் கண்காணித்து, அதனை பிடிக்க முயன்றுள்ளனர்.

இருப்பினும், அந்த ஆளில்லா விமானத்தை பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து, அடையாறு ஐ.என்.எஸ் கடற்படைதள அதிகாரி அனில்குமார், கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், ஆளில்லா விமானம் நோட்டமிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளில்லா விமானம் மூலம் நோட்டமிட்டது யார் என்பது குறித்து கோட்டை காவல்நிலைய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments