அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்திற்கு முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது

0 2351

அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்திற்கு "நேர்கொண்ட பார்வை" என பெயர் சூட்டப்பட்டு  முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித் குமாரின் 59ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை எச்.வினோத் பெற்றார்.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற பிங்க் திரைப்படத்தின் மறு ஆக்கமாக எடுக்கப்படும் இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்தப் படத்திற்கு நேர்கொண்ட பார்வை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பார்வை சுவரொட்டி நேற்றிரவு வெளியிடப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அஜித் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments