வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிகளைத் தத்தெடுத்தார் விஜய் சேதுபதி

0 1073

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடிகர் விஜய் சேதுபதி 2 வங்கப் புலிகளைத் தத்தெடுத்துள்ளார்.

நேற்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த நடிகர் விஜய் சேதுபதி ஆதித்யா மற்றும் ஆர்த்தி என்னும் இரண்டு வங்கப் புலிகளை தத்து எடுத்தார். இதன் மூலம் புலிகளின் பராமரிப்பு மற்றும் உணவுக்கான ஆறு மாதச் செலவுக்கான 5 லட்சம் ரூபாய்க்கான  காசோலையை பூங்கா இயக்குநர் யோகேஷ் சிங்கிடம் வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி, தனது நண்பர் ஒருவர் கூறியதின் அடிப்படையிலேயே இரண்டு வங்கப்புலிகளை 6 மாதம் தத்தெடுத்ததாகவும், இதே போல் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து தத்தெடுக்கவும் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments