ஐன்ஸ்டீனை விட அறிவுதிறன் கொண்டவர் என்ற பட்டத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பெற்றுள்ளார்

0 1464

புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அறிவுதிறன் கொண்டவர் என்ற பட்டத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பெற்றுள்ளார்.

சேனல் 4 என்ற தொலைக்காட்சி ஐ க்யூ ((IQ)) எனப்படும் அறிவுத்திறன் குறித்த போட்டியை நடத்தியது. இதில் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த நிஷி உக்காலே ((Nishi Uggale )) என்ற 12 வயது சிறுமி கணக்கு செய்வதிலும், அறிவியல் செய்திகளிலும் அதீத ஆற்றல் பெற்றிருந்தார். இதையடுத்து அதிக அறிவுத் திறன் கொண்டவருக்கான பட்டத்தை நிஷி தட்டிச் சென்றார்.

இவரது புத்திக் கூர்மை ஐன்ஸ்டீனை விட அதிகம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் தனக்கு முன்மாதிரியாக இருந்ததாக நிஷி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments