தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சரத்குமார் சந்திப்பு

0 2273

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பொதுவான அரசியல் நிலவரம் குறித்துபேசியதாக தெரிவித்தார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்துக்கு வந்த சரத்குமார் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், பொதுவாக அரசியல் நிலவரம் குறித்து விஜயகாந்திடம் பேசியதாகவும், தம்முடைய கருத்துகளை விஜயகாந்திடம் தெரிவித்ததாகவும் கூறினார். தன்னுடைய கருத்துகள் என்ன என்பதை பின்னர் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட சரத்குமார், தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியவர் விஜயகாந்த் தான் என்றார்.

தங்கள் கட்சி, கூட்டணி அமைத்து போட்டியிடுமா? அல்லது தனித்து போட்டியா? என்பது குறித்து வரும் 5ம் தேதி அறிவிக்க உள்ளதாக சரத்குமார் கூறினார். தேர்தலில் பணபலம் விளையாடாமல் இருந்தால் நிச்சயம் நல்லவர்கள் வெற்றி பெறுவார்கள் எனக் கூறிய சரத்குமார், ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டு பின் ஒன்று சேரும் போது மனது எப்படி ஒத்துப்போகிறது என்பது தெரியவில்லை என்று அன்புமணி குறித்து விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments