எரிக்சனுக்கு உடனடியாக ரூ.260 கோடி செலுத்த அனில் அம்பானி முயற்சி

0 901

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, எரிக்ஸன் நிறுவனத்துக்கு முதல்கட்டமாக 260 கோடி ரூபாயை செலுத்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 550 கோடியில், 118 கோடி ரூபாய் ஏற்கனவே நீதிமன்ற கரூவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 442 கோடி ரூபாய், அதற்கான வட்டி மற்றும் அபராதம் ஒரு கோடி ரூபாய் உட்பட 453 கோடி ரூபாயை 4 வாரங்களுக்குள் எரிக்ஸன் நிறுவத்துக்கு செலுத்தவில்லை என்றால், 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’’ என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக 260 கோடியை திரட்ட அனில் அம்பானி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு கடன் வழங்கியவர்களிடம் ஒப்புதலை அந்நிறுவனம் கோரியுள்ளது.

இந்த பணத்தை நேரடியாக எரிக்ஸன் நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தவும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், தேவையான பணத்தை 4 வாரங்களுக்குள் திரட்டவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments