நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரரின் இறுதிச்சடங்கில் ஷு அணிந்தபடி அமர்ந்திருந்த பாஜக அமைச்சர்கள்

0 940

நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரரின் இறுதிச்சடங்கில் பாஜக அமைச்சர்கள் ஷு அணிந்தபடி பங்கேற்றதால் உறவினர்கள் அவர்களை வசைபாடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

புல்வாமாவில் திங்களன்று நடைபெற்ற தீவிரவாதிகளுடனான என்கவுன்டரில் அஜய் குமார் என்ற வீரர் உயிரிழந்தார். அவரது உடல் எரியூட்டப்படுவதற்கான இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு அமர்ந்திருந்த பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சத்யபால் சிங், உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங், மீரட் பாஜக எம்எல்ஏ ராஜேந்திர அகர்வால் ஆகியோர் ஷு அணிந்தபடி அமர்ந்திருந்தனர்.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த உயிர்நீத்த வீரரின் உறவினர்கள், அறிவுடன் நடந்து கொள்ளுமாறும், காலணியைக் கழற்றுமாறும் கடிந்து கொண்டனர். பின், அவர்கள் இருகரம் கூப்பி சம்மதம் தெரிவித்து காலணிகளை கழற்றி வைத்தனர்.

உயிரிழந்த அஜய்குமார் சிங் 2011ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். 2015-ல் திருமணம் செய்து கொண்ட அவருக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. அஜய்குமாரின் தந்தையும் ராணுவத்தில் உயிரிழந்த நிலையில், அஜய்குமார் நாட்டைக்காக்கும் பணியில் தீவிரவாதிகளுடன் போராடி உயிர்தியாகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments