உடல் நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடுமலை ராதாகிருஷ்ணன் வீடு திரும்பினார்

0 693

உடல் நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று பிற்பகல் வீடு திரும்பினார்.

நேற்று மாலை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமை செயலகத்தில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தலைமையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ., உள்பட முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

ரத்தக் கொதிப்பு சிறிதளவே அதிகமிருந்ததாகவும், நேற்றைய கூட்டணி சந்திப்பில் அதிக நேரம் ஓய்வின்றி இருந்ததால் உடலில் தொய்வு ஏற்பட்டு மயங்கியிருக்கலாம் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் ஒன்றரை மணியளவில் உடல் நலம் தேறிவிட்டதாக மருத்துவர் அறிவுறுத்தலைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments