திமுக வெற்றிக்கு உழைக்கும் தொண்டர்களுக்கு உரிய மரியாதை - மு.க.ஸ்டாலின்

0 615

திமுகவின் வெற்றிக்கு பாடுபடும் கட்சித் தொண்டர்களுக்கு, அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு உரிய மரியாதை செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.

திண்டுக்கல்லில், திமுக வாக்குச்சாவடி முகவர்களின் கூட்டத்தில் பங்கேற்று, அவர்கள் மத்தியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறியிருக்கிறார். கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கு, அவர்களுக்கு என்ன வேண்டுமோ அது வந்து சேரும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.

காங்கிரஸ் கோலோச்சி வந்த தமிழ்நாட்டில், தொண்டர்களின் கடினமான உழைப்பால் தான், 1967ஆம் ஆண்டு, திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments