பாஜக கூட்டத்துக்கு ஹெல்மெட் அணிந்து சென்ற செய்தியாளர்கள்

0 864

சத்தீஸ்கரில், செய்தியாளரை தாக்கிய பாஜகவினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பாஜக கூட்டத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் ஹெல்மெட் அணிந்து சென்றனர்.

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில், பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடந்தது. இங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் ஒருவர், ஆலோசனை கூட்டத்தை செல்போனில் படம் பிடித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தொண்டர்கள் சிலர், செய்தியாளரை தாக்கியதில் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், மாநில பாஜக தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு சென்ற செய்தியாளர்கள், தலையில் ஹெல்மெட் அணிந்து சென்றனர்.

செய்தியாளரை தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், மீண்டும் இதுபோன்ற தாக்குதலில் யாரும் ஈடுபடக் கூடாது என்பதை வலியுறுத்தியும் ஹெல்மெட் அணிந்து சென்றதாக செய்தியளர்கள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments