எஸ்.சி - எஸ்.டி கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி கல்லூரிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவு

0 298

எஸ்.சி. - எஸ்.டி. கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி கல்லூரிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

எஸ்.சி. - எஸ்.டி. கல்வி உதவித்தொகையுடன் அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட நாமக்கல் ஞானமணி பொறியியல் கல்லூரியில் பயின்று வருவதாக மனுதாரர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசுத் தரப்பில் இருந்து இன்னும் எஸ்.சி. - எஸ்.டி. கல்வி உதவித்தொகை  செலுத்தப்படவில்லை எனக் கூறி தான் உட்பட 4 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

எஸ்.சி. - எஸ்.டி. கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்பதற்காக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதை ஏற்க இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை அனைத்து கல்லூரிகளும் ஒரு வாரத்தில் வெளியிட உத்தரவிட்டனர். தமிழக ஆதி திராவிட நலத்துறை செயலர், அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் ஆகியோர் இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கவும், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments