குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்...ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் முடிவு...

0 305

கூலி உயர்வு தொடர்பான பிரச்சனையில் முடிவு எட்டப்பட்டதால் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். 

பள்ளிப்பாளையம் பகுதியில் இயங்கிவரும் 200க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கான கூலி தொடர்பாக ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்தும் புதிய ஒப்பந்தம் போடாமல் 20 மாத காலமாக கூலி உயர்வும் செய்யப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனைக் கண்டித்து கடந்த 10 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இடையில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அங்குள்ள தனியார் மண்டபத்தில் புதன் இரவு நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினால், 6 விழுக்காடு கூலி உயர்வு தர்ப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் ஒப்புதல் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட கூலி உயர்வு முறையாக வழங்கப்படாத பட்சத்தில் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும் என்று தொழிலாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments