அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்றது மகாராஷ்ட்ர அரசு

0 294

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா தொடர்பான கோரிக்கைகளை மகாராஷ்ட்ர அரசு ஏற்றுக் கொண்டதால் 7 நாட்களாக இருந்த உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே முடித்துக் கொண்டார். ராலேகான் சித்தி என்ற இடத்தில் கடந்த 30ம் தேதி அன்னா தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

இதனால் அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் உடல் எடையும் வெகுவாகக் குறைந்தது. வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அன்னாவின் கோரிக்கை தொடர்பான புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதையடுத்து அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments