சூதாட்டக்காரர்களிடம் 10இலட்ச ரூபாய் கையாடல் செய்த காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

0 152

சென்னையில் நட்சத்திர விடுதியில் சூதாட்டக்காரர்களிடம் பத்து இலட்ச ரூபாயைக் கையாடல் செய்த கிண்டி காவல் ஆய்வாளர் குமார் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே உள்ள பார்க் ஹயாத் என்கிற நட்சத்திர விடுதியின் ஓர் அறையில் சூதாட்டம் நடப்பதாகத் தகவல் அறிந்த கிண்டி காவல் ஆய்வாளர் குமார் அங்குச் சென்று சூதாட்டக்காரர்களிடம் இருந்த 10இலட்ச ரூபாய் பணம், செல்பேசி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளார். காவல்நிலையத்துக்குச் சென்ற அவர் இது குறித்து வழக்குப் பதியவும் இல்லை.

இந்நிலையில் பணத்தை இழந்த சூதாட்டக்காரர்கள் சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். அதன்பின் நடத்திய விசாரணையில் பத்து இலட்ச ரூபாயை அவர் கையாடல் செய்தது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்துக் கிண்டி காவல் ஆய்வாளர் குமாரை ஆயுதப்படைக்கு இடமாற்றி மாநகரக் காவல் ஆணையர் விசுவநாதன் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments