வீட்டுநலனைப் பாராத ஒருவர் நாட்டை எப்படி ஆள முடியும்? - நிதின் கட்கரி

0 686

வீட்டு நலனைப் பாராத ஒருவர் நாட்டை எப்படி ஆள முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வினவியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பாஜகவின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிசத் கூட்டத்தில் நிதின் கட்கரி உரையாற்றினார். அப்போது வீட்டு நலனைப் பாராத ஒருவர் நாட்டை எப்படி ஆள முடியும் என அவர் வினவினார்.

வீட்டையும், குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொண்டு, அவர்களின் தேவைகளை நிறைவு செய்த பின்னரே கட்சிக்கும் நாட்டுக்கும் தொண்டு செய்ய வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments