தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆதரவு

0 751

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

"இந்திய அரசியலமைப்பை காப்போம்" என்ற தலைப்பில், தர்ணாப் போராட்டம் நடத்திய மம்தாவுடன், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரும் பங்கேற்றார். இவர்களுடன், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், தர்ணாவில் கலந்து கொண்டனர்... 

மம்தாவிற்கு ஆதரவாக கொல்கத்தா உட்பட மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று இரவு ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்க்ளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மம்தாவிற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். மம்தாவை தொலைபேசியில் கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தங்களுடன், தோளோடு தோள் நின்று, போராடுவோம் என உறுதியளித்திருக்கிறார்.

கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மம்தா பானர்ஜியின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக ஆட்சியில், அரசியல் சாசன அமைப்புகளின் தன்னாட்சி அதிகாரம் பறிபோவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க, மம்தா முன்னெடுத்த தர்ணா பாராட்டுக்குரியது என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார்.  

image

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

image

image

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments