யமுனையாற்றைக் கண்காணிக்க ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தலாம்

0 274

யமுனை ஆற்றை மாசுபாட்டில் இருந்தும் ஆக்கிரமிப்பில் இருந்தும் பாதுகாக்க ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தலாம் எனப் பசுமைத் தீர்ப்பாயம் அமைத்துள்ள வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

யமுனை ஆற்றைத் துய்மைப்படுத்துவதற்கு டெல்லி முன்னாள் தலைமைச் செயலர் சைலஜா சந்திரா, சஜ்வான் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவினர் தங்கள் பரிந்துரைகளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளனர். அதில் ஆற்றை மாசுபாட்டில் இருந்தும் ஆக்கிரமிப்பில் இருந்தும் காக்க ஆளில்லாக் குட்டி விமானங்களைப் பயன்படுத்தலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

காலியிடங்களில் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க இஸ்ரோவுடன் இணைந்து டெல்லி வளர்ச்சி ஆணையம் திட்டம் தீட்டியுள்ளதாகவும் இது வெற்றியடைந்தால் யமுனையின் நீர்வடிப்பகுதியில் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் இந்த முறை பயன்படுத்தப்படும் என்றும் வல்லுநர் குழு குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments