ஏர் இந்தியா விமானத்தில் தரப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக புகார்

0 370

ஏர் இந்தியா விமானத்தில், காலையில் பறிமாறப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக, பயணி ஒருவர் புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்று காலையில், மத்திய பிரதேசத்தின் போபாலிலிருந்து, ரோஹித் ராஜ்சிங் சவுகான் என்பவர், ஏர் இந்தியா விமானத்தில், மும்பைக்கு பயணமானார். அப்போது, விமானத்தில், அவருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.

அதில், கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இதுகுறித்து விமான சிப்பந்திகளிடம் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் அவரது புகாரை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

இதையடுத்து, மும்பையில், விமானம் தரையிறங்கியதும், ஓடோடிச் சென்ற ரோஹித் ராஜ்சிங் சவுகான் புகார் அளித்தும், எந்த வித உடனடி நடவடிக்கையும், ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொள்ளவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments