லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னாஹாசரே உடல்நலம் பாதிப்பு

0 323

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அன்னா ஹசாரேவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜனவரி 30 ஆம் தேதி காந்தியவாதி அன்னாஹசாரே, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ராலேகான் சித்தியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் 80 வயதான அன்னாஹசாரேவின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஹசாரே தற்போது மிகவும் சோர்ந்து காணப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments