பேனர் கடைக்காரரை மிரட்டி வீடியோ வெளியிட்ட நடிகர் சிம்புவின் ரசிகர் கைது

0 459

பேனர் கடை உரிமையாளரை மிரட்டிய சிம்பு ரசிகர் மன்ற தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்கிற மச்சிமதன்,நடிகர் சிம்பு ரசிகர் மன்றத்தின் மாவட்டத் தலைவராக உள்ளார். சிம்புவுக்கு பேனர் அடித்து தர மறுத்த பேனர் கடை உரிமையாளரை மிரட்டி வீடியோ எடுத்து வெளியிட்டதோடு, ரஜினி மற்றும் அஜீத் படங்களின் பேனரை கிழித்துவிட்டு சிம்பு பேனர் வைபேன் என்றும் மிரட்டல் விடுத்து அவர் வீடியோ வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து கொலை மிரட்டல் வழக்கில் மச்சி மதன், ராணிபேட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments