லாலு பிரசாத் யாதவின் குடும்ப சொத்துக்கள் முடக்கம்- அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

0 502

லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரின் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர்.

மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே லாலு பிரசாத் யாதவ் சட்ட விரோதமாக பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதை சில ஆண்டுகளுக்கு முன்பே வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறைக்கு வருமான வரித்துறை பரிந்துரை செய்தது.

அதன்பேரில் பாட்னா நகரிலும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் மற்றும் பினாமி பெயரில் இருந்து நிலங்கள் அனைத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments