டிரம்ப்-கிம் சந்திப்பு ஆசியாவில் ஏதேனும் ஒரு நாட்டில் நடைபெறும்

0 237

டிரம்ப்-கிம் சந்திப்பு ஆசியாவில் ஏதேனும் ஒரு நாட்டில் நடத்தப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.

போர் முனைப்புடன் இருந்த அமெரிக்கா-வடகொரியா நாடுகள், கடந்த ஆண்டு சுமூக உறவை எட்டின. இதற்கு கடந்த ஆண்டு ஜூனில் சிங்கப்பூரில் நடைபெற்ற இரு நாட்டு அதிபர்கள் சந்திப்பு வழிவகுத்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் மீண்டும் கிம் ஜோங் உன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

அந்த சந்திப்பு நடைபெறும் தேதி, இடம் தெளிவாகாமல் இருந்தநிலையில், ஏதேனும் ஒரு ஆசிய நாட்டில் தான் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை தேதி, இடம் குறித்து இறுதி செய்ய அமெரிக்க தரப்பில் இருந்து வடகொரியாவுக்கு ஒரு குழு அனுப்பியிருப்பதாகவும் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments