பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய மம்தாவுக்கு, ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

0 503

மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் மம்தா பானர்ஜி இடையே தொலைபேசியில் காரசாரமான வாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேற்குவங்க மாநிலம் கிழக்கு மிதுனாப்பூர் மாவட்டத்தில் அமித் ஷா பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய பா.ஜ.க தொண்டர்கள் தாக்கப்பட்டதுடன் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அப்போது பாஜக தொண்டர்கள் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தைத் தாக்கியதாக மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டிப் பேசியதால் இருவரிடையே காரசாரமான வாதம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments