ராணுவம் ரூ. 2,000 கோடி நிலுவைத் தொகை - ரஃபேல் விமான நிறுத்துமிட கட்டுமானப் பணிகள் பாதிப்பு

0 445

ராணுவம் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்கத் தவறினால் ரஃபேல் விமான நிறுத்துமிடங்களுக்கான கட்டுமானப் பணி பாதிக்கப்படும் என ராணுவ பொறியியல்துறை கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முதல் தவணை ரஃபேல் விமானங்கள் வரும் செப்டம்பரில் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ பொறியியல்துறை கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் பிரவீண் மகானா இரண்டு இடங்களில் கடந்த 8 மாதங்களாக விமான நிறுத்துமிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வந்ததாகத் தெரிவித்தார்.

நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்தப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்ட நிலையில் கடந்த 2 மாதங்களாக பணிகள் நின்று விட்டதாகக் கூறினார். தொடக்கத்தில் வங்கிகள் தங்களுக்கு கடன் அளித்ததாகவும் தற்போது வங்கிகளும் கடன் அளிக்க மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments