ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி

0 446

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி ஆட்டக்காரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

மெல்போர்னில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றுப் போட்டியில், கீரிஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபஸ் (( stefanos tsitsipas )) ரோஜர் பெடரரை எதிர்கொண்டார். இருவரும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் சுற்றை பேராடி கைப்பற்றிய பெடரர், அடுத்தடுத்த சுற்றுகளில் பின்னடைவை சந்தித்தார்.

இறுதியில் 6-7, 7-6, 7-5, 6-5 ஆகிய செட் கணக்கில் ஸ்டெபனோஸ் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ரபேல் நடால், செக்குடியரசு நாட்டை சேர்ந்த தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments