சூரத் நகரில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி வரும் 30ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்

0 999

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி வரும் 30ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

சூரத்தில் இருந்து முதல் சர்வதேச விமானம் ஷார்ஜாவுக்கு அன்றைய தினம் தொடங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை சூரத் விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சுங்கத்துறையினர் அனுமதி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சர்வதேச தரத்தில் அமைய உள்ள இந்த அதி நவீன சர்வதேச விமான நிலையம் பல லட்சம் சூரத் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இதன் மூலம் சூரத்தின் ஜவுளி மற்றும் வைரங்கள் தொழில் மேம்படும் என்பதுடன் வெளிநாட்டுப் பயணிகளின் சுற்றுலாவுக்கும் வாய்ப்பு உருவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments