மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் பீகார் ஆண்கள் குறித்து பாஜக நிர்வாகி விமர்சனம்

0 490

மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் பீகார் ஆண்களின் மனைவிகள் சொந்த கிராமத்திலேயே கர்ப்பமாகி, குழந்தை பெற்றெடுப்பதாக, பாஜக நிர்வாகி ஒருவர் பேசியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் பீகாரிகள் வசிப்பதற்கு, சில அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் சட்ட மேலவை உறுப்பினரான பாஜகவைச் சேர்ந்த சுரேஷ் தாஸ் என்பவர், மராட்டியத்தில் தங்கியுள்ள பீகாரிகள் குறித்து பேசியுள்ளார்.

அதில், பீகார் ஆண்கள் மராட்டியத்தில் தங்கியுள்ள நிலையில், அவர்களது மனைவிகள் சொந்த ஊரிலேயே கர்ப்பமாகி, குழந்தை பெற்றெடுப்பதாகவும், அதை இனிப்பு வழங்கி பீகார் ஆண்கள் மராட்டியத்தில் கொண்டாடுவதாகவும், மோசமாக விமர்சித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு தரப்பினர், சுரேஷ் தாஸ் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments