உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் மீது சிபிஐ குற்றச்சாட்டு

0 467

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் விதிகளை மீறி ஒரே நாளில் 13 சுரங்கங்களை குத்தகைக்கு விட்டதாக சிபிஐ அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், கனிமவளத்துறை அமைச்சராகவும் இருந்த அகிலேஷ் யாதவ், 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி ஒரே நாளில் 13 சுரங்கங்களைக் குத்தகைக்கு விட ஒப்புதல் அளித்துள்ளதா சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது. இது 2012-ம் ஆண்டு ஆன்லைன் டெண்டர் கொள்கைப்படி சட்டவிரோதம் என குறிப்பிட்டுள்ளது.

பாஜக தமது சொந்த ஆதாயத்துக்காக, சிபிஐ-யை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரள விடாமல் செய்ய முயற்சிப்பதாக அகிலேஷ் குற்றம்சாட்டியநிலையில், திங்களன்று சிபிஐ அகிலேஷ் மீதான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments