பொள்ளாச்சி அருகே ஆயில் கிடங்கில் பயங்கர தீ விபத்து

0 290

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஏற்பட்ட தீவிபத்தில் ஆயில்குடோன் முற்றிலும் எரிந்து நாசமானது.

சுஞ்சுவாடி கிராமத்தில் உள்ள இந்த குடோனில் கழிவு ஆயில்களை  சேகரித்து, பின்னர் சமையல் எண்ணெய் தயாரித்து அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில், நேற்று மாலை பற்றிய தீ மளமளவெனப் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ஆயில் முழுவதும் எரிந்து நாசமானதுடன் கட்டிடமும் தரைமட்டம் ஆனது அருகில் இருந்த 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் எரிந்தன.

ஊருக்கு உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் இந்த குடோனில், கலப்பட எண்ணெய் தயாரிக்கப்பட்டு வந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோமங்கலம் போலீசார் குடோன் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments