தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு நீதித்துறையில் இடஒதுக்கீடு - ரவிசங்கர் பிரசாத் பேச்சு

0 416

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு நீதித்துறையில் இட ஒதுக்கீடு அளிப்பதன்மூலம் நீதித்துறையில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்ய முடியும் என மத்தியச் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் பேசிய ரவிசங்கர் பிரசாத் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் அனைத்திந்திய நீதித்துறைப் பணிகளுக்குத் தேர்வு நடத்தப்பட்டால், அதில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதன்மூலம் பின்தங்கிய பிரிவினரில் திறமையான நீதித்துறை அலுவலர்களை உருவாக்க முடிவதுடன், நீதித்துறையில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments