மன்மதன் படத்தின் டப்பிங் உரிமையை போலி ஆவணம் மூலம் விற்க முயற்சி என புகார்

0 188

சிலம்பரசன் இயக்கி நடித்த மன்மதன் திரைப்படத்தின் டப்பிங் உரிமையை, போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து, இந்தியில் விற்க முயற்சிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், இயக்குநர் டி.ராஜேந்தர் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மன்மதன் திரைப்படத்தின் உரிமை தம்மிடம் இருக்கும் நிலையில், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தூண்டுதலின் பேரில், எஸ்.என். மீடியா நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சய் லால்வானி என்பவர், போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளதாக, டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments