வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை என பரவும் தகவலுக்கு வங்கி அதிகாரிகள் மறுப்பு

0 704

வங்கிளுக்கு வரும் 29 ஆம் தேதி முதல் தொடர்ந்து  5 நாட்கள் விடுமுறை என சமூகவலைதளங்களில் பரவி வரும் தகவல் உண்மையில்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகளுக்கு மார்ச் 29,30 மற்றும் ஏப்ரல் 1, 2 ஆகிய தேதிகளில் விடுமுறை நாட்ளாகும். 5ம் சனிக்கிழமையான மார்ச் 31ம் தேதியும் விடுமுறை என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில், இதனை வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு மறுத்துள்ளது.

வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மகாவீர் ஜெயந்தி மற்றும் புனிதவெள்ளியையொட்டி விடுமுறை நாளாகும். ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையைத் தொடர்ந்து திங்கட் கிழமை வங்கி வருடக்கணக்கு முடிவுக்காக இயங்கும் என்ற போதும் வாடிக்கையாளர் சேவை நடைபெறாது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments