அணு ஆயுத பரவலுக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறி 7 பாகிஸ்தானிய நிறுவனங்களுக்கு தடை விதித்து அமெரிக்கா உத்தரவு

0 189

அணு ஆயுத பரவலுக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறி 7 பாகிஸ்தானிய நிறுவனங்களுக்கு தடை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவிடமிருந்து பெற்ற அணுதொழில்நுட்பத்தை வடகொரியா போன்ற ஆபத்தான நாடுகளுக்கு வழங்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள 23 நிறுவனங்களுக்கு அமெரிக்க தொழில் பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.

இவற்றில் 7 நிறுவனங்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவையாகும். என்.எஸ்.ஜி. உறுப்பினராவதில் இந்தியாவுடன் போட்டியிட பாகிஸ்தான் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், விதிக்கப்பட்டுள்ள தடை அக்கூட்டமைப்பில் பாகிஸ்தான் இடம் பெறும் முயற்சியில் பின்னடைவு ஏற்படுத்தும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments