மணல் மாஃபியா குறித்து செய்தி சேகரித்து வந்த புலனாய்வுப் பத்திரிக்கையாளர் லாரி ஏற்றி கொல்லப்படும் காட்சிகள் வெளியீடு

0 248

மத்தியப்பிரதேசத்தில் மணல் மாஃபியா குறித்து செய்தி சேகரித்து வந்த புலனாய்வுப் பத்திரிக்கையாளர் லாரி ஏற்றி கொல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

மத்தியப்பிரதேசத்தின் பிந்த் பகுதியில் இன்று காலை சந்தீப் சர்மா என்ற புலனாய்வுப் பத்திரிக்கையாளர் சக பத்திரிக்கையாளருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது லாரி ஒன்று அவர்கள் சென்றுகொண்டிருந்த இருசக்கரவாகனத்தை நோக்கி இயக்கப்பட்டு அவர்களை இடித்துத் தள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சந்தீப் சர்மா மத்தியப் பிரதேச போலீசாருக்கும் மணல் கொள்ளையர்களுக்குமான உறவை அம்பலப்படுத்தும் வகையில் செய்தி சேகரித்து வந்தார். தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ள நிலையில் அவர் லாரி ஏற்றி கொல்லப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments