தூத்துக்குடியில் குளங்கள் தூர்வார ஸ்டெர்லைட் நன்கொடை அளிப்பதற்கு விவசாயிகள் கண்டனம்

0 220

குளம் தூர்வாருவதற்கும் திருச்செந்தூர் கோவிலுக்கும் ஸ்டெர்லைட் ஆலை நன்கொடையாக நிதி வழங்குவதற்குத் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விவசாயிகளும் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடங்கியவுடன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். குளம் தூர்வாருவதற்கும், திருச்செந்தூர் கோவிலுக்கும் ஸ்டெர்லைட் ஆலை நன்கொடை அளிப்பதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆலைக்கு ஆதரவாகப் பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்து மனு கொடுக்கச் செய்வதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments