7 பேர் விடுதலை விவகாரம் தமிழக அரசு தனது கடமையைச் செய்து விட்டது - சி.வி.சண்முகம்

0 612

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு தனது கடமையைச் செய்து விட்டதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் கூடுதல் சார்பு நீதிமன்ற கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்து விட்டதாக தெரிவித்தார். ஆளுநரின் முடிவுக்குப் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று அவர் கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments