அடையாறு காவல் மாவட்டத்தில் 10,000 சிசிடிவி கேமராக்கள்

0 546

50 மீட்டர் தொலைவுக்கு ஒரு சிசிடிவி கேமரா என்ற இலக்கை எட்டி  சென்னை அடையாறு காவல் மாவட்டம் சாதனை படைத்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் மொத்தம் 29 காவல் நிலையங்கள் உள்ளன. இந்தக் காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் 10 ஆயிரத்து 247 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் சேவையைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சென்னைக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அடையாறு துணை ஆணையர் ஷ்ஷாங் ஷாய் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறுவர்களின் ட்ரம்ஸ் இசை நிகழ்ச்சியுடன் பிரமாண்டமாக விழா தொடங்கியது.

காவல் உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதை அடுத்து சிசிடிவி கேமராக்கள் சேவையை ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

மேடையில் பேசிய அவர், சென்னைக் காவல்துறைக்கு இது ஒரு மைல் கல் என்று கூறினார். பொதுமக்களுக்கு போலீஸ் நண்பன் என்பது போல, போலீசுக்கு சிசிடிவி கேமராக்கள் நண்பர்கள் என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய துணை ஆணையர் ஷஷாங் ஷாய், இன்னும் அதிகப்படியான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று கூறினார். ரோட் நாட் டேக்கன் என்ற கவிதையை சுட்டிக் காட்டி அவர், காவல் ஆணையருக்கு நன்றி தெரிவித்தார்.

அடையாறு காவல் மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, அதனை பராமரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments