சாலையை கடந்து சென்ற காட்டு யானைகள் மீது கற்களை வீசி எறிந்த இளைஞர்கள்

0 459

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் சுற்றிவரும் 50க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அங்குள்ள சாலை ஒன்றை கடந்து சென்றன. அப்போது இளைஞர்கள் கடும் கூச்சலிட்டு காட்டுயானைகள் மீது கற்களை வீசி எரிந்தனர்.

கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து 200க்கும் மேற்பட்ட காட்டுயானைகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் சானமாவு, தேன்கனிகோட்டை, தளி, ஜவளகிரி போன்ற பல்வேறு வனப்பகுதிகளில் சுற்றித்திரிகின்றன.

இந்நிலையில், ஓசூர் சானமாவு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள், தமது குட்டிகளோடு அங்குள்ள ஒரு சாலையை கடந்து சென்றன. அப்போது இளைஞர்கள் கடும் கூச்சலிட்டு கற்களை எடுத்து காட்டுயானைகள் மீது எறிந்தனர்.

இதனால் காட்டுயானைகள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தன. இவ்வாறு யானைகள் மீது கற்களை எறியக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியும், இளையோர் சிலரின் செயல், வனவிலங்கு ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments