கஜா புயல் பாதிப்பை சீர் செய்ய முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை சுமார் ரூ.136 கோடி நன்கொடை

0 493

கஜா புயல் பாதிப்புக்களை சீர் செய்ய தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை சுமார் 136 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

கடந்த மாதம் 19-ஆம் தேதி கஜா புயல் பாதிப்புக்களை சீர் செய்ய பொதுமக்களும் உதவுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். அதன் படி ஏற்கெனவே 48 கோடியே 77 லட்சத்து 345 ரூபாய் நிதி கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 4-ஆம் தேதி முதல், 12-ஆம் தேதி வரை நிதியுதவி அளித்தோரின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

அமால்கமேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, PSG குழும நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன், சாய் பல்கலைக்கழக நிறுவனர் கே.வி. ரமணி, சவிதா பல்கலைக்கழக வேந்தர் என்.எம்.வீரையன் உள்ளிட்டோர் தலா ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளனர்.  இவர்கள் உள்பட பொதுமக்கள் வழங்கிய நிதியுடன் சேர்த்து 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்து 791 ரூபாய் நிதி கிடைத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments