ஜெயலலிதாவிற்கு 100 சதவீத சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது - பிரதாப் ரெட்டி

0 461

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு 100 சதவிகித அளவிற்கு, சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனை தொடங்கப்பட்ட 1983ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில், 50 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இதுதொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி, தொற்றாத நோய்களுள் முக்கிய ஒன்றான இதய நோயால், உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1 கோடியே 70 லட்சம் பேர் உயிரிழப்பதாக தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு 100 சதவீதம் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், தற்போது இது தொடர்பான வழக்கு ஆணையத்தில் இருப்பதால் விரிவாக எதையும் கூற இயலாது எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments