நிலத்தை பெற்றுக்கொண்டு பெற்றோரை பராமரிக்கத் தவறிய மகன்கள் - குடித்துவிட்டு அடித்தாகவும் புகார்

0 856

திருவண்ணாமலை அருகே நிலத்தை பாகப்பிரிவினை மூலம் பெற்ற மகன்களால் அடித்து விரட்டப்பட்ட முதியோருக்கு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உதவியுள்ளார். மகன் பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்த மாவட்ட ஆட்சியர் அந்த நிலத்தை மீண்டும் முதிய தம்பதிக்கே பெற்றுக் கொடுத்துள்ளார். 

வேடநத்தத்தைச் சேர்ந்த கண்ணன் - பூங்காவனம் தம்பதியரின் ஒரு மகன் பழனி அரசு வேலையிலும், மற்றொரு மகன் செல்வம் மேஸ்திரியாகவும் உள்ளனர். கண்ணன் - பூங்காவனம் தம்பதியர் தங்கள் பெயரில் இருந்த 5 ஏக்கர் நிலத்தை 7 ஆண்டுகளுக்கு முன்பு பாகப் பிரிவினை செய்துகொடுத்தனர்.

இந்நிலையில் இரண்டு மகன்களும் பெற்றோருக்கு சரிவர உணவு அளிப்பதில்லை என்றும் இளைய மகன் செல்வம் தினமும் குடித்துவிட்டு வந்து தந்தையை அடித்தாகவும் கூறப்படுகிறது. இதனால்  கண்ணன் - பூங்காவனம் தங்கள் நிலத்தை திருப்பிக் கேட்டதையடுத்து இரு மகன்களும் அடித்து வீட்டில் இருந்து விரட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

தங்கள் நிலை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த கண்ணன் - பூங்காவனம்  தம்பதியர், தங்கள் நிலத்தை மீட்டுக்கொடுத்தால் அதில் விவசாயம் செய்து தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து வேடநத்தம் பகுதியில் விசாரணை நடத்திய அதிகாரிகள் கண்ணன் - பூங்காவனம்  தம்பதியரின் புகாரில் உண்மை இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து மகன்களின் பெயரில் எழுதப்பட்ட நிலப்பதிரம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் கண்ணன் - பூங்காவனம் தம்பதியின் பெயரிலேயே பத்திரம் எழுதப்பட்டது. அந்தப் பத்திரத்தை அவர்களிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மகன்கள் தாக்கினாலோ, தகாத முறையில் நடந்துகொண்டாலோ காவல்துறையில் புகார் அளிக்க அறிவுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments