பிரிட்டனின் பிரெக்சிட் உடன்படிக்கையை ஏற்றது ஐரோப்பிய யூனியன்

0 445

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்து, அந்நாட்டின் பிரதமர் தெரசா மே தயாரித்த உடன்படிக்கைக்கு ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும் பிரிட்டனின் முடிவு குறித்து கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த பொதுவாக்கெடுப்பில், அதிக ஆதரவு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளுடனான உறவு குறித்த உடன்படிக்கையை தெரசா மே தயாரித்திருந்தார். இதற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒப்புதல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, 27 நாடுகளின் தலைவர்களை,  பிரசல்ஸ் நகரில் தெரசா மே சந்தித்தார்.

அப்போது, தெரசா மேயின் உடன்படிக்கைக்கு 27 நாடுகளும் ஒப்புதல் அளித்தன. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் இதை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனால், இது கொண்டாட வேண்டிய தருணம் இல்லை என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் க்ளாட் ஜங்கர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT