ஆஸ்திரேலியாவில் புழுதிப்புயலால் 3 வது நாளாக இயல்புநிலை பாதிப்பு

0 368

ஆஸ்திரேலியாவில் வீசிய புழுதிப்புயல் காரணமாக, சிட்னி உள்ளிட்ட நகரங்களில் 3-வது நாளாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் புதனன்று 500 கிலோ மீட்டர் வேகத்தில் புழுதிப்புயல் வீசியது. இதனால் வீடுகள், கட்டிடங்கள், சாலைகள் என எங்கும் புழுதியாகவே காட்சியளித்தன.

பலத்த காற்றினால் ஏராளமான வீடுகளின் கூரைகள் சேதமுற்றன. சிட்னி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விமான நிலையங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

ரயில்களும் இயக்கப்படவில்லை. இதே நிலை 3-வது நாளாக நீடிக்கிறது. காற்றின் தரம் அபாயகரமானதாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுவாசக்கோளாறுகள் ஏற்படும் என்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சுகாதார எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமை சீராக இன்னும் ஒரு வாரம் ஆகக்கூடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments